சூது வாது இல்லாத நடிகர்… இமேஜ், ஈகோ பார்க்காமல் மற்ற ஹீரோக்களுடன் கூட சேர்ந்து நடிக்கும் ஹீரோ… என்றெல்லாம் அந்த நடிகரைப் பற்றி செய்தி வரும் நிலையில், ஹீரோயின் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு கண்டிஷன் வைப்பதாக தகவல் வருகிறது.

நடிகர் ஏற்கனவே குளிர்ச்சியான ஹீரோயினுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்தார். கிசுகிசு வந்தது.

இப்போது அப்படித்தான் இன்னொரு ஹீரோயினுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க, அவருடனும் கிசுகிசு வந்தது. இதனால் இனி தொடர்ந்து ஒரே ஹீரோயினுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். ஒரு ஹீரோயினுடன் ஒரு படம் என்பது அவரது புது முடிவு.

நல்ல முடிவு தான்… அப்படியே புது ஹீரோயின்களுக்கும் வாய்ப்பு கொடுங்க பாஸ்!