Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடமானத்திற்கு போன படம்.. அடக்கடவுளே! சந்தானதிற்கே இந்த நிலைமையா?
சென்னை: சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் வெளியாகாமல் இருப்பதற்கு என்ன பிரச்னை என்பது குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், சர்வர் சுந்தரம். இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.பிஜேஷ், கிட்டி, மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளது. தமிழர்களின் உணவு தான் படத்தின் முக்கிய கதை.
படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஒரு வழியாக இந்தப் படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.
அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படமும் வெளியானதால், . சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வெளியாகவில்லை. பின்னர் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அன்றும் படம் வெளியாகது என்கிறார்கள்.
இந்நிலையில் படத்துக்கு என்னதான் பிரச்னை என்று தயாரிப்பாளர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் கூறும்போது, இந்தப் படத்தை, மிராக்கிள் மூவிஸ் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்வதற்காக என்னிடம் வாங்கியது. இந்த நிறுவனம் சினிமாவுக்கு புதிது. ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது.
படத்தை சரியாக ரிலீஸ் பண்ணுவோம் என்று கூறியிருந்தார்கள். பின்னர் இந்த நிறுவனத்திடம் இருந்து சிலர், சில ஏரியாவுக்கு வினியோகம் பண்ண வாங்கி இருக்கிறார்கள். வாங்கியவர்கள் அதை வேறு சிலரிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். இதனால் ஐந்து ஏரியாவில் பிரச்னை. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தபிறகுதான் இதெல்லாம் வெளியே வந்தது.
நான்கு ஏரியா பிரச்னையை முடித்து, ரிலீஸூக்கு தயாரானால், இன்னொருவர் வந்து நிற்கிறார். அந்த ஒருவருக்கான பிரச்னையை மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் முடிக்க வேண்டும். அதோடு எனக்கும் அந்த நிறுவனம் பணம் கொடுக்க வேண்டி உள்ளது.
இதனால்தான் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், படத்தின் பிரச்னையை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன் என்றார்.
