Connect with us

Cinemapettai

தலித் மட்டுமல்ல, அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ப(பா)டம்- SERIOUS MEN விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

தலித் மட்டுமல்ல, அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ப(பா)டம்- SERIOUS MEN விமர்சனம்

இந்தியாவில் ஜாதி மத அடிப்படையில் பாகுபாடு மற்றும் அரசியல் பல வருடங்களாகவே உள்ளது. நம் தென் இந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் இது அதிகம். அவ்வப்பொழுது அடித்தட்டு மக்களின் நிலையை எடுத்துரைக்கும் படங்கள் பல பாலிவுட்டிலும் வரும்.

அக்டோபர் 2 நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியான சீரியஸ் மென் படம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. இப்படம் மனு ஜோசப் எழுதிய புத்தகத்தை வைத்து ரெடியாகி உள்ள படம்.

கதை – மும்பையில் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் உயர் பதவியில் இருப்பவர் அரவிந்த் ஆச்சார்யா அதாவது நம் நாசர் (பிராமணர்). அவருக்கு அசிஸ்டன்ட் ஆக இருப்பது அய்யன் மணி (தலித்) நவாஸுதீன் சித்திக். அய்யன் மணிக்கு பல விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். எனினும் ஆச்சார்யா இவரை ஒரு பொருட்டாக கூட மதிக்கமாட்டார்.

அய்யன் மணி தனது மனைவி ஓஜா மணி மற்றும் மகன் ஆதி மணியுடன் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் மகனுக்கு எந்த ஸ்கூலிலும் சீட் கிடைக்கவில்லை. எனவே தனது மகனின் குறையை மறைக்க, இவர் அவனுக்கு தனது ஆஃபீஸ் விஷயங்கள், சயன்ஸ், கணக்கு என சிலவற்றை கற்றுக்கொடுக்கிறார். அதனை மனப்பாடம் செய்து ஆதி பேச அவன் ஒரு ஜீனியஸ் என அனைவரும் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.

இதன் காரணமாக குடிசையில் ஒரு அறிவாளி என பிரபலமாகிறான் ஆதி. சில நேரங்களில் இவர் ப்ளூ டூத் வாயிலாக அவனுக்கு டிப்ஸ் கொடுக்க அவன் அனைவர் முன்பும் சமாளிக்கிறான். அவனை அடுத்த அம்பேத்கார் என முன்னிறுத்தி கார்ப்ரேட் அரசியலும் மறுபுறம் நடக்கிறது. இது எதுவும் தெரியாத ஓஜா மணி தன் மகன் பெரிய அறிவாளி என பெருமிதம் கொள்கிறாள்.

மகனின் ஸ்கூல் தேர்வு கேள்விகளை திருடி கொடுப்பது, அவனுக்கு அதிக விஷயங்களை கற்றுக்கொடுப்பது என செய்கிறார் அய்யன் மணி. இது அவரது மகனுக்கு எமோஷனல் பிரேக் டவுன் ஏற்பட காரணமாகிறது. ஆச்சார்யா செய்த பிராட் வேலையை லீக் செய்து அவர் வேலை போகும் சூழலை ஏற்படுத்தி, தன் பகையை தீர்க்கிறார். இந்த நேரத்தில் ஆச்சர்யாவின் எதிர்ப்பையும் சம்பாதிக்கிறார். ஆச்சார்யா இவரது மகன் பற்றிய உண்மையை அறிகிறார், அதனை அரசியல் தலைவருடன் பகிர்கிறார்.

இந்த நேரத்தில் தான் அய்யன் மணி ஆச்சார்யாவை வரவழைத்து உன்மையை சொல்கிறார். கூலி வேலை செய்யும் குடும்பம் தான் இவர்களுடையது. 10000 பணம் தருவார் என வெளிநாட்டு போட்டோக்ராபர் படம் எடுக்க கர்ப்பிணியாக இருந்த தனது தாயை அப்பா கூட்டி சென்றதாகவும், அவர் இவர் நல்ல உடல் வாகுடன் உள்ளார் எனவே வேண்டாம் என சொல்கிறார். உடனே ஐந்து கிலோ இடை குறைந்து செல்ல, போட்டோ எடுக்கிறார் அந்த நபர்.

அந்த போட்டோ பரிசை பெற இவர்களுக்கு 20000 ருபாய் அனுப்புகிறார் அவர். எனினும் குறைப்பிரசவம் காரணமாக தாய் மற்றும் செய் இருவரும் இறக்க நேரிடுகிறது. அந்த பணத்தில் தான் நான் படித்தேன். என் மகனுக்கு படிப்பு வரவில்லை என நான் எவ்வாறு முட்டாள் தானம் செய்ததாக தெரிவிக்கிறார். நாசரும் அந்த சிறுவனை மீடியா தொல்லை செய்யவேண்டாம், அவன் குழந்தை பருவத்தை அனுபவிக்கட்டும், வருங்காலத்தில் சாகசம் படைப்பான் என சொல்கிறார்.

இந்நிலையில் கிராமத்துக்கே திரும்புகின்றனர் இவர்கள். அங்கு 55 சதவிகிதம் எடுத்து பாஸ் ஆகிறான் ஆதி மணி. எனினும் எதிர்பார்த்த வாழ்வு மற்றும் பாராட்டு கிடைக்காத ஏமாற்றம் காரணமாக மன அழுத்தம் வந்து பித்து பிடித்தவன் போல சுற்றி வருகிறான் அய்யன் மணி.

சினிமாபேட்டை அலசல் – இட ஒதுக்கீடு, மதமாற்றம், படிப்பிற்காக பெற்றோர் குழந்தைகள் மீது வைக்கும் அழுத்தம், அரசியல் நிலைப்பாடு, கார்ப்ரேட் நோக்கம் என பல விஷயங்களை யதார்த்தமாக சொல்லியுள்ளனர் இப்படத்தில்.

சினிமாபேட்டை ரேட்டிங்- 3.25 / 5

serious men

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top