India | இந்தியா
தொலைக்காட்சி சீரியல்களின் எதிர்காலம் ஊ ஊ.. அடாது செய்தவன் படாது படுவான்
கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் இந்திய அளவில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் முக்கிய பொழுதுபோக்கான டிவி சீரியல் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் முதலீடு போட்டு கடும் நஷ்டத்தில் உள்ளனர்.
மக்கள் பீதியில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பிரபல டிவி சேனல்கள் பழைய சீரியல் நிகழ்ச்சிகளை போட்டு டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க குஷ்பூ வாட்ஸப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் மே 5 முதல் சீரியல் நிகழ்ச்சிகளை எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அந்த செய்தி சின்னத்திரை நடிகை,நடிகர்களிடம் வைரலானது.
இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஆர்.கே.செல்வமணியிடம் பேசியதாகவும் அவர்கள் கூறியது என்னவென்றால் நாளை முதல் தான் ராபிட் கிட் டெஸ்டிங் செய்யப்போவதாகவும், இதனால் எண்ணிக்கை கூடுதலான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் எதுனாலும் தற்போது கூற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தான் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராதிகா, ஒரு வாட்ஸ்அப் மெசேஜை தட்டியுள்ளார், அதில் சீரியல் தயாரிப்பாளர்கள் யாரையும் நடிப்பதற்கு வர சொல்லவில்லை என்றும், சீரியல் கதைகளை தயாராக வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளனராம். அரசாங்கம் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்த பின்பு தான் நாம் களத்தில் இறங்க முடியும் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.
சென்னையில் முக்கியமாக கோடம்பாக்கத்தில் தான் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்காது என்று ராதிகா தெரிவித்துள்ளார். படபிடிப்பு தொடங்கிய பின் கூட மாஸ்க் இல்லாமல் பணியில் இருப்பவர்களுக்கு அதிக அபராதம் போடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட சீரியல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஜூன், ஜூலை மாதத்தை தாண்டிவிடும் என்பதில் அரசு மற்றும் சுகாதாரத்துறை உறுதியாக உள்ளது. அதுவரை தினக்கூலியாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
