Tamil Nadu | தமிழ் நாடு
இனி தொலைக்காட்சிகளில் சீரியல்கள் இல்லை.. அதற்கு பதிலாக வேற கணக்கு போடும் சேனல்கள்
திரைப்படங்களை மிஞ்சிய ரசிகர்களை கொண்ட கூட்டம் தான் சின்னத்திரை. அதிலும் டி.ஆர்.பி அதிகமுள்ள சீரியல்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகரித்து கொண்டே தன போகும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கேயுமே தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களை எடுக்க முடியாத சூழ்நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
அதாவது முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாம். அதற்கு பதிலாக பிக் பாஸ் சீசன் 3, சூப்பர் சிங்கர் 7,சரவணன் மீனாட்சி, KPY சீசன் 3,சின்னதம்பி சீரியல் போன்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வதற்கு விஜய் டிவி தயாராகி வருகிறதாம்.
மற்ற சேனல்களிலும் சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாம். இதனால் அனைத்து சின்னத்திரை டி.ஆர்.பி ரேட்டிங் இறங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக திரைப்படங்களை சின்னத்திரையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் கொரோனாவின் அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு சின்னத்திரை வழியாக புதுப்படங்கள் ஒளிபரப்ப உள்ளது பிரபல சேனல்கள். இதனால் நெட்ப்ளிக்ஸ் போன்ற இணையதளங்களில் படங்களை பார்ப்பதை விட சின்னத்திரையில் பார்த்துவிடலாம்.
