Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீரியல் நடிகையுடன கள்ளத்தொடர்பு.. விஜய் டிவி பிரபலம் கைது.. அதிர்ச்சியில் சின்னத்திரை
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான விஜய் டிவியின் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் அவர் தாய் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆபீஸ், கல்யாண முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பிரபல சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடபழனி காவல் நிலையத்தில் அவர் மனைவி ஜெயஸ்ரீ கொடுத்துள்ள புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் கணவன் தன்னை துன்புறுத்துவதாகவும், மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை துன்புறுத்தி வருகிறார் என்று புகாரில் தெரிவித்துள்ளார். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இதுவரை மகாலட்சுமி இதைப் பற்றி எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த புகாரின் பெயரில் ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் அவரின் தாய் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் தற்போது சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறை என்றாலே இதுபோன்ற உறவுகள் வைத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
