Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி படத்தில் அறிமுகமான சின்னத்திரை பிரபலம்.. 40 வயதிலும் திருமணம் வேண்டாம்
சின்னத்திரையில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். மாண்பு மாண்புமிகு மாணவன் தளபதி நடித்த தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் kadal.com, ஜெர்ரி ஆகிய தமிழ் படங்களில் நடித்தும் அந்தப்படம் போதிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
ஆனால் சின்னத்திரை 13 வருடங்களாக தனது வாழ்க்கையை ரசிகர்களுக்காக கழித்து வரும் இந்த நடிகை தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனென்றால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார், மாமியாருக்கு நல்ல மருமகளாக, நல்ல மனைவியாகவும் பல சீரியல்களில் நடித்து பெண்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இவர் நடித்த சீரியலில் கோலங்கள், தென்றல், ஆபீஸ் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சன் குடும்பம் விருதுகள், விஜய் டெலிவிஷன் விருதுகள் ஆகியவை பெற்றுள்ளார். தற்போது அழகு மற்றும் கோபுர வாசல் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
