Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் மற்றொரு நாயகி.. அடி தூள்
பாலிவுட் சினிமாவில் தற்போதைய சூழ்நிலையில் ஹிந்தி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் சினிமா நடிகைகளாக வாய்ப்புகள் பெற்று வருகின்றனர். நாகினி சீரியலில் நடித்த மோனிகா ராய் போன்றோர் எடுத்துக்காட்டாகும்.
அதேபோல் தற்போது தமிழ் சினிமாவிலும் சீரியல் நடிகைகளின் வரவு அதிகமாக உள்ளது. கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் இருந்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து தெய்வமகள் சீரியல் இன் மூலம் புகழ்பெற்ற வாணி போஜன் என்பவர் அடுத்து தமிழ் சினிமாவில் களம் கண்டுள்ளார்.
அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் ஓம் மை கடவுளே படத்தில் கதையின் இன்னொரு நாயகியாக வலம் வர உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் வைபவ் உடன் ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகழ் கிடைப்பது நல்லதுதான்.. ஆனால் புகழ் போதை கிடைப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து பெரிய நாயகியாக வலம் வர வாழ்த்துகிறோம்.

vani-bhojan-debut
