டாப் ஆங்கிளில் நச்சுனு போஸ் கொடுத்த சந்திரலேகா.. சின்ன வயசுல எடுத்த டிரஸ் போல

chandralekha
chandralekha

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் பல வருடங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் சந்திரா என்னும் முக்கிய கேரக்டரில் நடிப்பவர் நடிகை ஸ்வேதா. அவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு தங்கையாக ஆழ்வார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்வேதா நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நான்தான் பாலா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் இவர் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.

இதுதவிர விளம்பர படங்களிலும் நடித்து வரும் ஸ்வேதா தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் டான்ஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அவ்வப்போது அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தும் வருகிறார்.

தற்போது அவர் தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் கருப்பு நிற குட்டையான உடை அணிந்து ரசிகர்களுக்கு தன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்வேதாவின் இந்த போட்டோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவர் இந்த உடையில் மெழுகு பொம்மை போல் இருப்பதாகவும், அமுல் பேபி என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வேதா நடித்து வரும் சந்திரலேகா சீரியல் சமீபத்தில்தான் இரண்டாயிரம் எபிசோடுகளை கடந்தது. சன் டிவி வரலாற்றில் ஒரு சீரியல் இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது இதுவே முதல் முறையாகும்.

swethabandekar
swethabandekar
Advertisement Amazon Prime Banner