Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலியல் வழக்கில் கைதான வாணி ராணி சீரியல் நடிகை
பிரபல சின்னத்திரை தொடரான வாணி ராணியில் நடித்து வரும் நடிகை சங்கீதா பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சினிமா உலகில் நாயகிகள் சிலர் பாலியல் தொழில் செய்து சிக்குவது அவ்வப்போது நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. பிரபல நடிகைகள் கூட திடீரென கைது செய்யப்படுவது ஊடகங்களில் ப்ரேக்கிங் செய்தியாக வரும். ஆனால், அதன் பிறகு அவர்கள் சில காலம் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கி விடுவர். வெள்ளித்திரையில் அதிகமாக நடக்கும் இச்சம்பவம் சின்னத்திரையிலும் அரிதாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
சன் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் என்றால் இரவு ஒளிபரப்பாகும் வாணி ராணியை கூறலாம். அத்தொடரில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் சங்கீதா.
அவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து காவல்துறை பாலியல் தொழில் செய்ததாக கைது செய்துள்ளது. இவருடன் சீரியல் துணை நடிகை உள்ளிட்ட 4 பேரும், சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வில்லி கதாபாத்திரத்திலும், சாந்தமான அம்மா வேடத்திலும் நடித்து வரும் சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தையும், வாணி ராணி சீரியல் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது.
