Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
புருஷனை மறைத்த பிரபல சீரியல் நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் சீரியல் நடிகை. ஒரே ஒரு சீரியல் மூலம் உச்சத்தை பெற்று தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் தெலுங்கு சினிமாக்களில் கணிசமாக பல வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதை அறிந்த அந்த நடிகை தன்னுடைய புருஷன் மற்றும் தனது பிறந்த குழந்தை ஆகிய இருவரையும் மறைத்து வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
சீரியலில் நடிக்கும் போதே தனக்கு வரும் புகழை பார்த்து விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு குழந்தை மற்றும் புருஷனை அனுப்பி விட்டு, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறிவிட்டாராம்.
மட்டுமில்லாமல் உங்களுக்கு தேவையான அனைத்தும் வீடு தேடி வரும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் நான் தான் உங்கள் மனைவி என்பதை வெளியில் கூறக்கூடாது எனவும் தெரிவித்து விட்டாராம்.
சொந்த குடும்பத்தையே ஹவுஸ் அரஸ்டில் வைத்திருக்கும் அந்த நடிகையை பார்த்து சினிமா உலகமே மிரண்டு விட்டதாம். அதற்கு காரணம் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் தானம்.
இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரிய பேச்சாக உள்ளது. பண மோகத்தில் இப்படியா இருப்பது என அந்த நடிகையை வசைபாடி வருகிறது.
