Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் முதல் படம் கூட ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள இவ்வளவு பந்தாவா.. சீரியல் நடிகையின் அட்டகாசம்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் நுழைவுகள் அதிகமாக உள்ளது. காரணம் சீரியலில் நடிக்கும்போது மக்களிடம் பிரபலம் அடைந்த அவர்கள், சினிமாவில் பெரிதாக சம்பாதிப்பது செட்டில் ஆகிவிடலாம் என்பது தான்.
ஆனால் பிரபல சீரியல் ஒன்றில் நடித்த நடிகைக்கு ஆரம்பத்திலிருந்தே படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அவரோ படத்தில் நடிக்காமல் அந்த வாய்ப்புகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். தற்சமயம் சினிமா ஹீரோயினாக அவதாரம் எடுத்து நடித்த முதல் படம் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே நடிகை தனது பெயரை கெடுத்துக் கொண்டு உள்ளார்.
சீரியல்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த நாயகி, சமீபத்திய பொது நிகழ்ச்சி ஒன்றில் படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இதனால் குடும்ப குத்துவிளக்கு ஆகிய நீங்கள்
குத்தாட்டம் போடும் விளக்காக மாறி விட்டீர்களா என இணையதளங்களில் குசும்புகள் செய்து வருகின்றனர்.
இதனால் நீண்ட காலம் சினிமாவில் நிலைப்பதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான்கள் கருதுகின்றனர். இதனால் சீரியலும் இல்லாமல் சினிமாவும் இல்லாமல் இவரின் பாடு திண்டாட்டமாக மாறும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என கிசுகிசுக்கிறது கோலிவுட்.
