Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதுவரை சின்னத்திரையில் தற்கொலை செய்து கொண்ட பிரபலங்கள்.. உலுக்கி எடுக்கும் பல உண்மைகள்!
வெள்ளி திரையைத் தாண்டி சின்னத் திரையின் மூலம் வீட்டில் இருக்கும் பெண்களை மகிழ்விக்கும் விதமாக பல சீரியல்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகிறது. அப்படி ஒவ்வொரு தொடரிலும் இருக்கும் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி அவர்களை அணு அணுவாக ரசித்து வரும் பிரபலங்கள் திடீரென்று தற்கொலை செய்துகொள்வது ரசிகர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படி ஒரு சம்பவம் தான் நேற்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியலில் உள்ள முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் மரணம் சின்னத்திரை ரசிகர்களை உலுக்கியது. அவரது மரணத்தைக் குறித்து தற்போது காவல்துறை தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
இவரைப்போலவே கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சின்னத்திரையில் இளம் நடிகையாக வலம் வந்த வைஷ்ணவி தனது ஆண் நண்பர் தேவ் ஆனந்த் தன்னை இரண்டாவது மனைவியாக இருக்கச்சொல்லி வலியுறுத்தியதால் மனமுடைந்த வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

vaishnavi
அதேபோல் ‘ஜில்லுனு ஒரு காதல்’, ‘சிறுத்தை’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் அடுத்த கோவை சரளா இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு தனது நடிப்பால் அசத்திய 32 வயதான நடிகை சோபனா உடல்நிலை குறைவால் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

shobana
அதுமட்டுமில்லாமல் தனது கொஞ்சம் சிரிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட சின்னத்திரை நடிகை சபர்ணா சன் டிவியில் ஒளிபரப்பான ‘பாசமலர்’ படத்தின் மூலம் பிரபலமானார், இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் மன உளைச்சலினால் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.

sabarna
அதேபோன்று சின்னத்திரையில் 8 வருடங்களாக ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ரவானி. இவர் ஹைதராபாத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், திடீரென்று வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.
காரணம் என்னவென்றால் டிக்டாக்கின் மூலம் அறிமுகமான தேவராஜ் என்பவர் தனது சகோதரியிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரவானியின் தற்கொலை தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேரை காவல்துறை கைது செய்தது.
அதேபோல் தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி, அதன் பின் பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் வலம் வந்த சாய் பிரசாந்த், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

serial-actress-cinemapettai
இவ்வாறு சின்னத்திரையில் தொடரும் தற்கொலைகளும் அதற்கான காரணங்களும் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாநில அரசும் தற்கொலைகளை தடுப்பதற்காக உதவி மையம் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அப்படியிருக்க திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் ஏன் இந்த தவறான முடிவை என்பது ரசிகர்களின் கேள்வியாகும்.
