புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு தைரியமா நோ சொல்லணும்.. நடிகைகளுக்கு அட்வைஸ் செய்த சீரியல் நடிகை

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொடர்பான பல தொல்லைகள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை எல்லாம் பார்த்து பயப்படாமல் பெண்கள் தைரியமாக எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையில் ஆபீஸ், தேவதை உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஜீவிதா அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் இவர் மாறன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் அவர் தனக்கு பட வாய்ப்பு கொடுக்க முன்வரும் பலரும் கிளாமராக நடிப்பீர்களா என்று தான் கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நமீதா நடிக்க வேண்டிய ரோல் உங்களுக்கு தருகிறோம் என்று கூறி விட்டு கடைசியில் சிறுசிறு ஆடைகளை அணிந்து நடிக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.

இதுபோன்ற வாய்ப்புகளை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று அவர் கோபத்துடன் கூறியிருக்கிறார். மேலும் ஒரு பெண் கவர்ச்சியாக நடித்தால்தான் அந்த சினிமா வெற்றி பெறுமா. கவர்ச்சி இல்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட எந்த திரைப்படங்களும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை, பெரியதிரை என்று எல்லா இடங்களிலும் நடிகைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ள பலரும் வற்புறுத்தி வருகின்றனர். இதுபோன்ற தருணங்களை சந்திக்கும் நடிகைகள் தைரியமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

சிலர் வேறு வழியில்லாமல் இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் பட வாய்ப்பை காட்டி இது போன்று கேவலமாக நடந்து கொல்பவர்களுக்கு துணிச்சலாக நோ செல்ல வேண்டும் என்று இன்றைய நடிகைகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அவருடைய இந்த கருத்துக்கு தற்போது பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News