மனம் கவர்ந்த நடிகை பட்டியலில் “கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடிகை பிரியா பவானி 23வது இடத்தை பிடித்து இருந்தார்.
சமீபத்தில் இவர் நடித்து வந்த “கல்யாணம் முதல் காதல் வரை” தொடரில் இருந்து திடீரென விலகியதால் இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை பிரியா பவானி ஷங்கர் விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அந்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க உள்ளதாகவும் படம் குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.