serial-actor-sai-prashanthதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்துள்ளார்.சின்னத்திரை மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சாய் பிரசாந்தின் தற்கொலை சம்பவம்

இதுக்குறித்து அவரே ஒரு கடிதத்தில் ‘தீராத குடும்ப பிரச்சனை, மன உலைச்சலே என் தற்கொலைக்கு காரணம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்கொலை குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.