இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்.. வசூல் வேட்டையாட வரும் சசிகுமாரின் நந்தன்

Sasikumar : இந்த வாரம் வெள்ளிக்கிழமை 20ஆம் தேதி தியேட்டரில் 5 படங்கள் வெளியாகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் வெளியான நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை. இதனால் கோட் படம் வசூலை அள்ளி வந்தது.

ஆனால் இந்த வாரம் கிட்டத்தட்ட 7 வித்தியாசமான படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தான் நந்தன். சசிகுமாரின் வித்யாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை இரா சரவணன் இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே இவர் சசிகுமாரின் உடன்பிறப்பே படத்தையும் இயக்கியிருந்தார். மேலும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அடுத்ததாக சட்டம் என் கையில் என்ற படம் செப்டம்பர் 20 வெளியாகிறது. கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்த வாரம் வெளியாகும் ஏழு படங்கள்

ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் ரப்பர் பந்து படமும் இந்த வார வெள்ளிக்கிழமை வர இருக்கிறது. இப்படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருக்கிறது கடைசி உலகப்போர். ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். கிராமம் சார்ந்த கதை அம்சமாக கொண்டுள்ள படம் தான் கோழி பண்ணை செல்லதுரை.

இயற்கை எழில் கொஞ்சும் படமாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஜெகதீஷ் சுப்பு இயக்கத்தில் நடிகர் காளி வெங்கட் நடிப்பில் தோனிமா என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துடன் தோழர் சேக்குவார் என்ற படமும் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.

மீண்டும் இயக்கத்திற்கே செல்லும் சசிகுமார்

- Advertisement -spot_img

Trending News