September 20 OTT Release Movies: இந்த வாரம் செப்டம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் கிட்டத்தட்ட 8 படங்கள் வெளியாகிறது. அதற்கு போட்டியாக ஓடிடியிலும் எக்கச்சக்க படங்களை இறக்கி உள்ளனர். நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படங்களும் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் பிப்ரவரி மாதம் லால் சலாம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் வெளியிடாத காட்சிகள் உடன் நீடிக்கப்பட்டு செப்டம்பர் 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த வருடம் மிகப்பெரிய பாராட்டை பெற்ற படம் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான தங்கலான். விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் வசூலை வாரி குவித்தது. தங்கலான் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
செப்டம்பர் 20 ஓடிடியில் வெளியாகும் படங்கள்
இந்தியில் வெளியான பஞ்சாயத் என்ற தொடரின் ரீமேக்காக உருவாகி இருக்கும் தலைவெட்டியான் பாளையம் படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. பஞ்சாப் மொழியில் உருவான ஜாட் அண்ட் ஜூலியட் படம் செப்டம்பர் 19 ஓடிடியில் வெளியாகிறது.
ஜோ தேரா ஹை மேரா ஹை என்ற நகைச்சுவை நாடகம் ஜியோ சினிமாவில் வெளியாகிறது. இதில் பரேஷ் ராவல் மற்றும் அமித் சியோல் நடித்துள்ளனர். தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 2 செப்டம்பர் 21 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அக்தா ஆல் அலாங், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 18 ஸ்ட்ரீம் ஆகிறது.
ட்விலைட் ஆஃப் தி காட்ஸ் வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மான்ஸ்டர்ஸ்,தி லைவ் மற்றும் எரிக் மெனெண்டஸ் செப்டம்பர் 19 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஆகையால் இந்த வார விடுமுறையை ஒடிடியில் படங்கள் பார்த்து நேரத்தை செலவிடலாம்.
ஓடிடியில் குவியும் மக்கள்
- ஓடிடிக்கு வரும் லால் சலாம், அங்க தான் ஒரு ட்விஸ்ட்
- இந்த வாரம் ஓடிடி, தியேட்டரில் படையெடுக்கும் 11 படங்கள்
- தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன, ஓடிடிக்கு வரும் வாழை