கோட் வசூலுக்கு ஏற்பட்ட சிக்கல்.. இந்த வாரம் ஓடிடி, தியேட்டரில் படையெடுக்கும் 11 படங்கள்

OTT, Theatre Release Movies: கடந்த வாரம் செப்டம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் வெளியாகி இருந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்தப் படம் கிட்டத்தட்ட 300 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. இப்போது கோட் வசூலுக்கு சிக்கல் ஏற்படும்படி இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.

தியேட்டரில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மலையாளத்தில் உருவான ஏ ஆர் எம் என்ற படம் தமிழிலும் டப் செய்து வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 12 தியேட்டரில் வெளியாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்தன் லால் இயக்கியிருக்கிறார். டோபினோ தாமஸ் மற்றும் கீர்த்தி செட்டி ஆகியோர் நடித்துள்ளார்.

மேலும் ஓடிடியில் கோலி சோடா ரைசிங் வெளியாகிறது. இதை நேரடியாகவே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்காக வெப் தொடராக இயக்குனர் விஜய் மில்டன் எடுத்திருக்கிறார். இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது.

செப்டம்பர் 12 ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

அடுத்ததாக ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியான நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் மட்டுமல்லாமல் அமேசான் பிரைமிலும் வெளியாகிறது. இந்த படத்தில் யூடியூபர் இர்ஃபான், விஜய் டிவி பாலா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மேலும் கடந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த நிலையில் இப்போது ஒரு மாதத்திற்கு உள்ளாகவே செப்டம்பர் 15ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

தெலுங்கு சினிமாவை பொருத்தவரையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிஸ்டர் பச்சன் மற்றும் ஏய் படங்கள் வெளியாகிறது. வின் ஓடிடி தளத்தில் கமிட்டி குரோலு ஈடிவி மற்றும் சோனி லைவ் தளத்தில் பெஞ்ச் லைஃப் படமும் வெளியாகிறது.

மலையாளத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தலைவன் படம் மட்டும் வெளியாகிறது. பாலிவுட்டை பொருத்தவரையில் நெட்பிளிக்ஸில் செக்டார் 36 மற்றும் ஜியோ சினிமாவில் கபாலி ரெக்கார்ட்ஸ் படமும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஆகையால் இந்த வார விடுமுறையை ஓடிடியில் படங்களை பார்த்து நேரத்தை செலவிடலாம்.

ஆதிக்கம் எடுக்கும் ஓடிடி

- Advertisement -spot_img

Trending News