ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் பெண்களின் எழுச்சிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருபவர் கங்கனா ரனாவத்.

பாலிவுட்டின் சில பெரிய புள்ளிகளை தைரியமாக கேள்வி கேட்கும் ஒரே ஆள் இவர்மட்டும்தான். தற்போதும் அப்படி ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார் கங்கனா.

நான் ஒன்றும் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. ஏனெனில் எனக்கு ஆண் நண்பர்களே அதிகம். ஆனால் ஆண்களைவிட பெண்கள் கேவலமாய் நடத்தப்படுவதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதிகம் படித்தவை:  தமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்!

சினிமாவில் ஆணாதிக்கம் ரொம்பவே அதிகம், ஆண்களாகிய நீங்கள் பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அதை மஜா என்கிறீர்கள் அதையே நாங்கள் செய்தால் குத்தம், அசிங்கம், கலாசார சீர்கேடு என்றெல்லாம் பூச்சு பூசுகிறீர்கள்.

சினிமா துறையில் உள்ள ஒருவர் தனது மகன் பல பெண்களுடன் உல்லாசமாய் இருப்பதை பெருமையாய் பேசுகிறார். ஆனால் இதுவே அவரது மகள் என்றால் பிகினி கூட அணிய விட்டிருக்கமாட்டார்.

அதிகம் படித்தவை:  படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர்.! பகீர் கிளப்பும் பிரபல நடிகை.!

உதாரணமாக என் வீட்டில் கூட நான் நடித்த காங்க்ஸ்டர் படத்தை என் அம்மா பாராட்டினார். ஆனால் என் அப்பாவால் அதில் வரும் பல காட்சிகளை பார்க்க கூட முடியவில்லை.

இவ்வாறு கங்கனா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.