Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் கவுண்டமணிக்கு கிடைத்த வரவேற்பு செந்திலுக்கு கிடைக்காதது ஏன்? வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டாரா?
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி ஜோடி என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். சாதாரண காட்சிகளை கூட சிறந்த காட்சிகளாக மாற்றும் வல்லமை இவர்களுக்கு உண்டு.
ஆனால் கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் பெரும்பாலும் கவுண்டமணிக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு அளவுக்கு செந்திலுக்கு கிடைக்கவில்லை என தற்போது வரை பேச்சுக்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.
உண்மையில் செந்திலை விட கவுண்டமணி ஒரு படி மேல்தான். கவுண்டமணியால் சர்வசாதாரணமாக செந்தில் இல்லாமல் ஒரு காமெடி காட்சியை சிறப்பாக செய்து கொடுக்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி செந்தில் இல்லாமல் பல படங்களில் தனி ஒரு காமெடியனாகவும் கலக்கி இருப்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் செந்தில் பெரும்பாலும் கவுண்டமணி இல்லாத காமெடி காட்சிகளில் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கவுண்டமணி செந்திலை அடித்தால் தான் செந்திலுக்கு பெயர் என்கிற அளவுக்கு இருந்தது.
செந்திலுக்கு திறமை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கவுண்டமணி அளவுக்கு தனி ஒருவராக ஒரு காமெடி காட்சியை தூக்கி நிறுத்தும் அளவுக்கு வல்லமை இருக்கிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான்.
ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் வேண்டுமென்றே கவுண்டமணி செந்திலை ஒதுக்குவது போன்ற தவறான பேச்சுக்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மையில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இவர்களில் யார் சிறந்தவர் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

goundamani
