Tamil Cinema News | சினிமா செய்திகள்
மக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.! செம்ம மாஸ் தகவல்
அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் விஸ்வாசம் திரைப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, வருகிற பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு.
நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு நேற்று வெளியிட்ட அடிச்சு தூக்கு என்ற பாடல் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியிருந்தார் பாடலை பாடி இசையமைத்திருந்தார் d இமான்.
இந்தநிலையில் விஸ்வாசம் படத்திலிருந்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது விஸ்வாசம் படத்தில் மக்கள் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுபுற பாடகர் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் கிராமத்து பின்னணியில் இருக்கும் இந்த படத்திற்கு இவரின் பாடல் கச்சிதமாக பொருந்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
