Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த லவ் மேட்டரை கசிய விட்டதே பிரியமான நடிகை தானம்.. கடுப்பில் விவகாரமான நடிகர்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது அந்த இளம் நடிகை மற்றும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் காதல் பற்றி தான். அந்த நடிகைக்கு அப்பா வயது இருக்கும் நடிகர் சேர்ந்து நடிக்கும் நடிகையின் மீது காதல் வயப்பட்டு ப்ரொபோஸ் செய்ததாக செய்திகள் வெளிவந்தது.
அது கிட்டத்தட்ட உண்மை தான் என்கிற ரேஞ்சுக்கு சினிமா வட்டாரங்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் ஊதி பெரிதாக்கி விட்டனர். ஏற்கனவே அப்செட்டில் இருக்கும் முன்னால் இயக்குனரும் தற்போதைய நடிகருமான அந்த பிரபலம், காதல் சொல்லிய விஷயத்தை வெளியில் பரவியதே நடிகை தான் என தெரிந்து செம கடுப்பில் இருக்கிறாராம்.
இயக்குனர் ஏதோ ஒரு ஆசையில் நடிகையிடம் காதலைச் சொன்னால் வேண்டும், வேண்டாம் என்று இரண்டில் ஒன்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. அதைப்போய் தன் நண்பர்களிடம் உளறி வைத்துள்ளார் அந்த நாயகி.
நண்பர்களும் அரசல் புரசலாக பேச எப்படியோ செய்தி வெளியாகி விட்டது. இந்த செய்தி உண்மையில்லை என நிரூபிக்க பிரபல நடிகர் அடிச்சு புடிச்சு சமூக வலைதளங்களில் கதறி வந்தார். இருந்தாலும் போன மானம் போனது தானே.
சினிமாவில் இது ஒன்றும் புதிது இல்லையே. அதுவும் அந்த நடிகருக்கு இதெல்லாம் சகஜம். இருந்தாலும் சமீப காலமாக நற்பெயரை பெற்று வருவதால் தன்னுடைய சேட்டைகள் எல்லாம் அடக்கி வைத்துள்ளாராம் அந்த நடிகர்.
ஏற்கனவே இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தனது காதலனை அறிமுகப்படுத்திய அந்த பிரியமான நடிகை தற்போது அந்த காதலனுடன் சற்று பிரச்சினையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்தக் காதலரும் நடிகைக்கு முதல் காதலர் இல்லை என உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாம்.
வயது முப்பதைத் தாண்டினாலும் முகத்தில் இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுவதால் சினிமாவில் ஒரு ரவுண்டு வராமல் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
மேலும் நம்பர் நடிகை ரேஞ்சுக்கு இந்த நடிகையை புகழ்ந்து பேசுவதால் புகழ் போதையில் காதலாவது கத்திரிக்காயாவது என இளம் நடிகர்களுடன் சுற்றி வருகிறாராம் அந்த பிரபல நடிகை.
என்ன கருமமோ என தலையில் அடித்துக் கொள்கிறது கோடம்பாக்கம்.
