ஒரு பக்கம் ஜுனியர் ஹீரோக்களான சிவகார்த்திகேயன் போன்றோர் நயன் தாரா போன்ற சீனியர் ஹீரோயின்களுடன் ஆசைப்பட்டு நடித்து தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக ஜுனியர் ஹீரோயின்கள்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம்.

இதில் முக்கியமானவர்கள் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஹேண்ட்ஸம் ஹீரோக்கள். இருவருமே சம்பள விஷயத்தில் கூட விட்டுக் கொடுக்கிறார்களாம். ஆனால் ஹீரோயின்கள் கண்டிப்பாக இளம் நடிகைகளாகத் தான் இருக்க வேண்டுமாம்.

தவ நடிகர் அடுத்து நடிக்கும் படத்துக்கு அவரது வயதில் பாதி வயதுடைய மலர் டீச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும் ஜோடியாக இளம் நடிகைகளையே கமிட் செய்கிறார்கள். இதேபோலத்தான் மதுபான நடிகருக்கும்.

இவர்கள் எல்லாம் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.