Connect with us
Cinemapettai

Cinemapettai

ipl 2020

Sports | விளையாட்டு

ஐபிஎல் டி20 தொடரில் படு மோசமான விளையாட்டு பிரபல வீரர்களுக்கு ஆப்பு.. இந்திய அணியில் இடம் இல்லை!

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி பேட்டிங்கில் சொதப்பியதால், இந்திய அணியில் இரு வீரர்கள் தங்களுக்குரிய இடத்தை இழந்துள்ளனர்.

இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்த அந்த இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து கழட்டி விடப்பட்டனர்.

சிஎஸ்கே அணியின் கேதார் ஜாதவ், ஆர்சிபி அணியின் ஷிவம் துபே ஆகிய இரு வீரர்கள்தான், இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 35 வயது ஜாதவ், உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இடம் பெற்று வருகிறார்.

மே.இ.தீவுகள் தொடர், நியூஸிலாந்து தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் ஜாதவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியில் இடம் பெற்று கடைசியாக 5 ஆட்டங்களில் 13,8,3,12,5 ரன்கள் மட்டுமே சேர்த்தார் கேதார் ஜாதவ்.

அதுமட்டுமின்றி இளம் ஆல்ரவுண்டர் ஆகிய ஷிவம் துபேவுக்கும் கேப்டன் கோலி அதிகமான வாய்ப்புகளை வழங்கினார். ஆனால், பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார் துபே.

இவர்கள் இருவருக்கும் போதுமான வாய்ப்புகளை கொடுத்தது இந்திய அணி. இருவரும் மோசமான பார்ம் காரணமாக தங்களுடைய இடத்தை இழந்துள்ளனர்.

ipl-2020

Continue Reading
To Top