சென்னை: தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் ஹீரீயினை விட ஹீரோ முப்பது வருடங்களுக்கு மேல் மூத்தவராக இருப்பார். இருந்தாலும் இருவரும் ஜோடி சேர்ந்து டூயட் பாடுவார்கள். ஆனால், ஹீரோயின்கள் தன்னை விட இளம் வயது நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது அபூர்வம். ஆனாலும் ஜோதிகா, காத்ரினா கைப், ராணி முகர்ஜி உள்ளிட்ட சில நடிகைகள் தன்னை விட இளவயது நடிகர்களுடன் நடித்துள்ளனர்.

குழந்தைப் பருவத்தில் ஹீரோவுடன் நடித்த பேபி ஸ்டார், வளர்ந்ததும் அதே ஹீரோவுடன் பலபடங்கள் ஜோடியாக நடிப்பார். இது தமிழ், இந்தி என இந்திய சினிமாக்களில் மிக இயல்பாக நடக்கின்ற விஷயம்.

ஆனால்தன்னை விட ஒன்றிரண்டு வயது மூத்த ஹீரோயின்கள் கூட ஹீரோக்கள் நடிப்ப்பதற்கு மறுப்புத் தெரிவிப்பார்கள். ஆனால் அப்படியான சூழலிலும் சில நடிகைகள் தன்னை விட இளம் வயது ஹீரோக்களுடன் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  எரும சாணி புகழ் விஜய்யின் காதலியை பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

மன்மதன் மற்றும் சரவணா என இரு படங்களில் ஜோதிகா தன்னை விட குறைந்த வயதுள்ள சிம்புவுடன் ஜோடியாக நடித்தார். அந்த சமயத்தில் அவர் புகழின் உச்சியில் இருந்தார். கமல், ரஜினி என பெரிய ஹீரோக்களுடன் நடித்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விட இளையவரான சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இது கோலிவுட்டில் நடந்த அதிசயம் என்றால் பாலிவுட்டிலும் இதுபோன்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

அதிகம் படித்தவை:  அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை.! யார் என்று தெரியுமா.!

கரீனா கபூர் திருமணத்துக்கு பிரகும் நடித்து வருகிறார். இவர் தன்னை விட இளவயது நடிகர்களான இம்ரான் கான், அர்ஜூன் கபூருடன் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் தன்னை விட இளம் வயது நடிகரான அபிஷேக் பச்சனுடன் நடித்ததுடன் அவரையே திருமணமும் செய்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் ரன்வீர் கபூருடன் நடித்துள்ளார். இருவருக்கும் எட்டு வருடங்கள் வயது வித்தியாசம் குறிப்பிடத்தக்கது.

அதிக ரசிகர்களை வசீகரித்த ராணி முகர்ஜி தன்னி விட மூன்று வயது சிறியவரன சாஹித் கபூருடன் நடித்துள்ளார். ஹாலிவுட்டில்கூட கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங் உடன் நடித்துள்ளார். அவர், பிரியங்காவை விட 3 வயது இளையவர் என்பது தான் விஷயமே