நடிகை பார்வதி கடந்த 2006ம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி 2008ம் ஆண்டு தமிழில் பூ, மரியான், பெங்களூர் டேஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த முதல் படமான பூ திரைப்படத்திற்கு தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சமீப காலமாக படவாய்ப்பு குறைவாக உள்ள நடிகை பார்வதி அளித்த பேட்டியில் பட வாய்ப்பு தருவதாக கூறி  படுக்கை அறைக்கு மலையாள சினிமாவில் சீனியர் நடிகர்கள் இயக்குனர்கள் வெளிப்படையாக என்னை அழைத்தார்கள். சினிமா என்றால் அப்படி இப்படி தான் இருக்கும். நீ தான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டுமென சீனியர் இயக்குனர் அழைத்து ப்ஃரீஅட்வைஸ் கொடுத்தனர்.

சில சமயங்களில் தவறாக நடக்க முயற்சி செய்தார்கள். அவர்களிடம் இருந்து தப்பி அவர்களின் தொடர்புகளை துண்டித்து விட்டேன்.அப்படிபட்டவர்களின் படங்களை நான் நிராகரித்தேன்.

அப்படி செய்து தான் பட வாய்ப்பு பெற வேண்டும் என்றால் அது எனக்கு தேவையில்லை. நடிப்பதை தவிர வேறு வேலையும் என்னால் செய்ய முடியும். இதனால் தான் எனக்கு படவாய்ப்பு வரவில்லை. மேலும் நான் எதையும் சர்ச்சையாக கூறவில்லை. அனைவருக்கும் இது தெரிந்த விஷயம் தான் என வெளிப்படையாக தெரிவித்தார்.