செம போத ஆகாத

கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதர்வா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘செம போத ஆகாத’. பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் அணைக்கா சோட்டி, மிஷகீ சக்ரவர்த்தி என்று இரண்டு ஹீரோயின்கள். கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

படத்தை வரும் மே 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இன்று சினேக் – பீக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த இரட்டை அர்த்த வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது.