Sports | விளையாட்டு
டெல்லி அணியை அடித்து தும்சம் செய்த CSK அபார வெற்றி.! அரை சதம் அடித்த இரண்டு வீரர்கள்
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல் அணிக்கும் அரை இறுதி போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆனால் அபாரமாக பந்து வீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியது . அதனால் டெல்லி அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பிறகு இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Faf du Plessis அபாரமாக விளையாடி 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மற்றும் shane watson 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு இருவரும் பாடுபட்டனர். அதன் பிறகு சுரேஷ் ரெய்னா ,அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி மூவரும் விளையாடி அணியை வெற்றியடையச் செய்தனர்.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4விக்கெட்டுகள் இழப்பில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது , இதனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
