Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செம்பருத்தி சீரியல் நடிகையை உள்ளாடையுடன் காருக்குள் வைத்து? அடுத்த சித்ரா நான்தான் என குமுறும் நடிகை

பல வருடங்களாகவே சினிமா நடிகைகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் தொடர்கிறது.

சமீபகாலமாக சினிமாவைவிட சீரியல் நாயகிகள் தான் இந்த மாதிரி புகார்களில் அதிகமாக சிக்கி வருகின்றனர். வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்ற பலரின் ஆசை பேச்சை நம்பி மோசம் போய் விடுகின்றன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல்தான் செம்பருத்தி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் செம்பருத்தி சீரியல் மூலம் தான் ஜீ தமிழ் என்ற சேனல் இருப்பதே பலருக்கும் தெரியும்.

அப்படி பிரபலமான சீரியல் நடித்துள்ள உமா என்ற நடிகையை அதே சீரியலை சேர்ந்த சில நபர்கள் ஆசை வார்த்தை காட்டி அவர்களுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். மேலும் அவரை அரை நிர்வாணப்படுத்தி ஒரு காருக்குள் வைத்து கொண்டு சென்னை சிட்டியை சுற்றி காருக்குள்ளேயே மானபங்கப் படுத்தியுள்ளனர்.

அந்த நடிகையை மட்டுமில்லாமல் அந்த நடிகையின் தங்கச்சியையும் மோசமான புகைப்படங்களை எடுத்து மிரட்டி தங்களுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இது சம்பந்தமாக அந்த நடிகை நேரடியாக புகார் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என பத்திரிகையாளர்களை கூப்பிட்டு புலம்பி வருகிறார். மேலும் அடுத்த சித்ராவாக மாறிவிடக் கூடாது என்று அவர் கூறியதன் மூலம் சித்ராவையும் இப்படித்தான் கொடுமைப்படுத்தினார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதை பார்த்த பொதுமக்கள் சமூக வலைதளங்களை இந்த மாதிரி கொடுமைப்படுத்துபவர்களை விட, முதலில் அந்த மாதிரி அத்துமீறும் அளவுக்கு பெண்கள் நடந்து கொள்வதைதான் விமர்சித்து வருகின்றனர். இந்த மாதிரி காரியங்களில் ஈடுபடும் பலரும் செல்வாக்குள்ளவர்களாக இருப்பதால் அந்த வழக்கும் தள்ளுபடி ஆகிவிடுகிறது.

sembaruthi-serial-uma-cinemapettai

sembaruthi-serial-uma-cinemapettai

Continue Reading
To Top