செம்பருத்தி சீரியல் பார்வதியை கரம் பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தங்களது குடும்ப உறுப்பினராகவே நினைத்துக் கொள்ளும் எண்ணம் ரசிகர்களிடையே பெருமளவு நிலவும்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர், இதில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஷபானா வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக பிரபலம் அடைந்துள்ளார்.

எனவே ஷபானாவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் உலாவியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷபானா நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த,

நடிகர் ஆர்யன் உடன் மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் திருமண நிச்சயம் புகைப்படத்தை எடுத்துள்ளார். இதை நடிகர் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

shabana-cinemapettai
shabana-cinemapettai

நடிகர் ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

shabana1-cinemapettai
shabana-cinemapettai

இப்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷபானா ஆர்யன் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்