ஜாக்கிசானுடன் இருக்கும் செம்பருத்தி சீரியல் கார்த்திக்.. மொட்ட கட்டிங், சேவ் செய்த மீசை என ஆளு வேற மாதிரி இருக்காரு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் தான் அவர்களுடைய ஜாக்பாட் சீரியல். செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் ஜீ தமிழ் டிஆர்பி ரேட்டிங் படுபயங்கரமாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மார்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் என்பவர் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டிவியில் ஆபிஸ் போன்ற சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஜோடியாக ஷபானா என்ற நாயகி நடித்து வந்தார். மேலும் மாமியார் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை பிரியாராமன் நடித்து வந்தார்.

இந்த சீரியல்தான் ஜீ தமிழ் சீரியலில் அதிக டிஆர்பி பெறும் சீரியல். இந்நிலையில் சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய துணை நடிகை ஒருவர் நடிகர் கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு செம்பருத்தி சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து விட்டதாக தெரிகிறது. கார்த்திக் கதாபாத்திரத்திற்கு மாற்றாக யூடியூப் சேனலில் வேலை செய்த அக்னி என்பவரை ஹீரோவாக்கினார்கள்.

செம்பருத்தி சீரியல் கார்த்திக் விஜய் டிவியிலும் ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெறும் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்படிப்பட்ட கார்த்திக் ஜாக்கிசானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karthik-jackie-john-cinemapettai
karthik-jackie-john-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்