Connect with us
boomerang-movie

உருவாகிறது ‘செம்பரம்பாக்கம்’ – சென்னை வெள்ளத்தை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்

News | செய்திகள்

உருவாகிறது ‘செம்பரம்பாக்கம்’ – சென்னை வெள்ளத்தை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்

chennai-floodவெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். எதார்த்தமான அதே சமயம் மனதில் பதியும் படியும் மக்களின் வாழ்க்கையைப் படமாக்குவதில் பேர் போனவர் வசந்தபாலன்.

இவர் தனது புதிய படத்திற்கு சென்னை வெள்ளத்தையும், அதன் பாதிப்புகளையும் கதைக்கருவாக எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்திற்கு செம்பரம்பாக்கம் என அவர் பெயரிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடையாறு கரையில் வசிக்கும் மக்களின் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி இப்படம் பேச இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

மார்ச் மாத ஆரம்பத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அப்போது படத்தின் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top