கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதர்வா ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘செம போத ஆகாத’. பாணா காத்தாடி படம் வாயிலாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் அணைக்கா சோட்டி, மிஷகீ சக்ரவர்த்தி என்று இரண்டு ஹீரோயின்கள். கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நரேன், ஜான் விஜய், யோகி பாபு, மனோ பாலா, திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதயம் முரளி
murali

ஒரு படம் ஆரம்பித்தவுடன் தன் காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்ய பல முறை முயற்சி எடுத்தும், கடைசியில் கிளைமாக்ஸ் வரை சொல்லாமலே இருப்பார். அதே போல் அதர்வா தான் ஆரம்பித்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி போனது, எனினும் கடைசியாக (ஒருவழியாக) நேற்று வெளியானது.

அதிகம் படித்தவை:  இசையின் பின்னணயில் எமோஷனல் ரோலர் கோஸ்டர். வெளியானது ஜி வி பிரகாஷின் சர்வம் தாளமயம் டீஸர் .
கதை

தன் காதலியுடனான பிரேக் – அப்பில் இருந்து மீளமுடியாத அதர்வா, தன் நண்பன் கருணாகரனுடன் பகலிலேயே குடித்து செம போதே ஆகிவிடுகிறார். பின்னர் சிறுது சபலப்பட்டு, அன்று இரவு தன் வீட்டிற்கே ஐட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். எனினும் போதே தெளிந்த பின் இவர் தடுமாறுவது, பூட்டிய வீட்டிற்குள் அந்த பெண் கொலை செய்யப்படுவது. பதறிய அதர்வா எவ்வாறு கொலை செய்தவனை கண்டுபிடிக்கிறார் என்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

semma botha aagatha
சினிமாபேட்டை அலசல்

தயாரிப்பாளராக தன் முதல் படத்தில் காதல், காமெடி, ஆக்ஷன், ரொமான்க்ஸ், சஸ்பென்ஸ் என அனைத்தையும் சேர்ந்துவிட்ட தயாரிப்பாளருக்கு நம் பாராட்டுக்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எளிதில் யூகிக்க முடிய காட்சிகள் தான் என்றாலும் படம் போர் அடிக்காமல் செல்வதே படத்தின் பிளஸ். டயமிங் காமெடியில் அசத்திவிட்டனர் இந்த டீம். சுந்தர் சி போல் சிறிய கதையா அழகாக
நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளார் இயக்குனர். ஆகமொத்தத்தில் இவர்களின் டார்கெட் ஆடியன்ஸ் இளசுகள் தான். அவர்களை முழுவதும் திருப்தி படுத்திவிட்டனர்.

அதிகம் படித்தவை:  வைரலாகுது தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில் அஜித்துக்கு சொல்லிய பிறந்தநாள் வாழ்த்து !
பிளஸ்

அதர்வா, காமெடி, பின்னணி இசை, வசனம், ஒளிப்பதிவு

semma bothai aagatha
மைனஸ்

தேவையற்ற இடங்களில் பாடல்கள், அதீத இரட்டை அர்த்த வசனம், நீண்ட நேர கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி

சினிமாபேட்டை வெர்டிக்ட்

பொழுதை போக்க வேண்டும், ஜாலியாக இருக்க நினைத்து இந்த செம போத ஆகாத படத்துக்கு சென்றால் செம டயம் பாஸ் தான்.

சினிமாபேட்டை ரேட்டிங் :-  2.75 / 5 .