Connect with us
Cinemapettai

Cinemapettai

படத்தினை பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வரும் வேலையில், NGK கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த செல்வராகவன்.

selvaraghavan surya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படத்தினை பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வரும் வேலையில், NGK கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த செல்வராகவன்.

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ரிலீசான படம் நந்த கோபாலன் குமரன்.

NGK வாக சூர்யா. இன்றைய பல இளசுகளின் ஆழ் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிக்காட்டும் கதாபாத்திரம் அவருடையது. தான், தன் குடும்பம் என மட்டும் இல்லாமல், நாடு மற்றும் அதன் மக்கள் என நினைக்கக்கூடிய, படித்த, பொது மற்றும் சமுதாய நலன் மீது அக்கறை கொண்டவன் இந்த குமரன்.

செல்வாவின் ட்ரேட் மார்க் படம் முழுவதும் இல்லை, சூர்யா நடிப்பு சூப்பர், யுவன் சிறப்பு என்று தான் விமர்சகர்கள், சினிமா அனலிஸ்ட்கள் சொல்லி வருகின்றனர். எனினும் அதில் பலர் படத்தின் உள்ளர்த்தம் என்ன, என்று தெளிவிற்காக யோசிக்கவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். இந்த கருத்தை மைய்யப்டுத்தி தான் செல்வா தன் டீவீட்டில் பதிவிட்டுள்ளார்.

“NGK விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள். கடமைப்பட்டுள்ளேன். உங்களில் சிலர் யூகித்து சரி தான் குமரன் கதாபாத்திரத்தில், பல ரகசியங்கள் மற்றும் எண்ணங்கள் உள்ளது. நீங்கள் உன்னிப்பாக படத்தை கவனித்தால், எளிதில் அதனை புரிந்துகொள்ள முடியும். படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று என்ஜாய் செய்யுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top