Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷ் இயக்கி பாதியில் கைவிட்ட படத்தை கையில் எடுக்கும் செல்வராகவன்.. தரமான சம்பவம் காத்திருக்கு!

dhanush-selvaragavan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கி பாதியில் கைவிட்ட படத்தை கையில் எடுக்கும் செல்வராகவன்.. தரமான சம்பவம் காத்திருக்கு!

கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் மற்றும் ஹீரோ தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இந்த அண்ணன் தம்பி காம்போ எப்பொழுது இணைவார்கள் என கோலிவுட்டே ஏங்கி கொண்டுதான் இருக்கிறது.

புதுப்பேட்டை 2 ஸ்க்ரிப்டில் செல்வா உழைக்க ஆரம்பித்ததும் அனைவரும் கொண்டாடினார். இந்நிலையில் செல்வா மற்றும் தனுஷ் இருவரின் படம் பற்றிய புதிய கிசு கிசு கோடம்பாக்கத்தில் ஒலித்துவருகின்றது.

பா பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ரெடியாகும் படம் நான் ருத்திரன். முதல் கட்ட படப்பிடிப்பு ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது. நாகார்ஜூனா, ஸ்ரீகாந்த், எஸ் ஜே சூர்யா, அணு இம்மானுவேல், அதிதி ராவ், சரத்குமார் என பல நட்சத்திரங்களை வைத்து தனுஷ் எடுத்துவிட்டார்.

ஆனால் இப்படத்தில், இதே நடிகர்களை வைத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் பீரியட் ட்ராமா விஷயங்கள் தான் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் எடுக்க வேண்டுமாம். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் எடுத்த அனுபவத்தின் காரணமாக இயக்குனர் செல்வா தன் தம்பிக்கு உதவி கரம் நீட்டுவார் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

ஸ்க்ரிப்டில் உதவி செய்வாரா அல்லது படத்தின் பகுதியையே இயக்குவாரா என்பது போன்ற விஷயங்கள் போகப்போக தான் தெரிய வரும். ஜகமே தந்திரம் ரெடி, அதன் பின் மாரி செல்வராஜின் கர்ணன், அக்ஷ்ய் குமாருடன் ஹிந்தி படம், கார்த்திக் நரேன் படம், ரவிக்குமாரின் படம் என நடிகராகவே மிகவும் பிஸி தனுஷ்.

எனவே இயக்கத்தில் செல்வாவின் உதவி கிடைக்கும் பட்சத்தில் அண்ணன் – தம்பி இணைந்து இயக்கும் படம் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top