ரூட்டை மாற்றிவிட்ட மனைவி.. தட்டாமல் கேட்கும் செல்வராகவன்!

தனித்துவமான இயக்குனராக தமிழ் சினிமாவில் பார்க்கப்படும் இயக்குனர் செல்வராகவன், முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன்பிறகு குறுகிய காலத்திலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பிறகு செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்பம் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கமென்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களில் எல்லாம் காதலை ட்ரெண்டிங்காக புது வர்ஷனாக காண்பித்து ரசிகர்களிடையே இவர் இயக்கும் படங்களுக்கு தனி மவுசு இருக்கும்.

இப்படிப்பட்ட இயக்குனரை முதல் முதலாக தமிழ் சினிமாவில் நடிகராக சமீபத்தில் வெளியான சாணிக்காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பொதுவாக இயக்குனர்கள் நடிகராக மாறுவது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்றாலும், செல்வராகவன் இதற்குப் பிறகு படங்களை இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில், அவருடைய மனைவி கீதாஞ்சலியின் அதிரடி முடிவு அதற்கு பதிலாக அமைந்திருக்கிறது.

நானே வருவேன் திரைப்படத்தை நடித்து முடித்த பிறகு, செல்வராகவன் முழுநேர நடிகராக மாறி விட அவருடைய மனைவி கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் இந்த முடிவையே வலியுறுத்துவதால் இனி படங்களை இயக்க வேண்டாம் என செல்வராகவனின் தம்பியும் சொல்லி இருக்கிறார்.

இதனால் அவர்களது முடிவை ஏற்று இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுவதற்காக ஆர்வத்துடன் இருக்கும் செல்வராகவன், தன்னுடைய மனைவியோடு நிறைய படங்களின் கதைகளை கேட்க ரெடியாக உள்ளார்.

Next Story

- Advertisement -