வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரெண்டு மாஸ்டர் பீஸ் படங்களின் 2வது பாகம்.. நச்சரித்த ரசிகர்கள்.. நச் பதில் சொன்ன செல்வராகவன்

செல்வராகவன் தன் அடுத்த படங்கள் பற்றிய அப்டேட் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். அடுத்து, 7 ஜி ரெயின்போ காலனி படம் மூலம் ஒரு காதல் படத்தை இப்படியும் கொடுக்க முடியுமா? என்ற மேஜிக்கை நிகழ்த்திக் காட்டி, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

அடுத்து, தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி படத்திற்கு கதை எழுதியிருந்தார். இதையடுத்து, கார்த்தி – ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போது இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், அன்றைய காலக்கட்டத்தில் எப்படி யோசித்தார்? இதன் மேக்கிங் தரமாக உள்ளதே என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மயக்கம் என்ன? இரண்டாம் உலகம் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின், இவரது இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை, சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே ஆகிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன்.

அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தியவர், சாணிக்காகிதம், பீஸ்ட், நானே வருவேன், பகாசூரன், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகராகவும் ஜொலிக்கிறார். இந்த நிலையில், செல்வராகவன் எப்போது ஆயிரத்தில் ஒருவர் 2, புதுப்பேட்டை 2 படத்தை இயக்குவார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது அடுத்த படங்கள் பற்றி அப்டேட் கொடுத்த செல்வராகவன்

இதுதொடர்பாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் கேள்விக்கு பேட்டியளித்த செல்வாகவன், ’’புதுப்பேட்டை 3 படமும், ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் கட்டாயம் வரும். மற்றவர்களைக் காட்டிலும் நான் அதில் ஆர்வமுடன் இருக்கிறேன். இப்படங்களின் கதை எழுதுவதற்கு நிறைய தேவைப்படுகிறது. முன்பு போல் இப்போது இல்லை. ஒரு வருடமாவது அதற்கு ஆகும்.

கதையில் மாற்றம் தேவைப்படும். அதற்கேற்ப அடாப்ட் ஆக வேண்டும். அது என்னோட தனிப்பட்டை ஆர்வம் அதை ஸ்கிரீனில் பார்த்தே ஆக வேண்டும் என்று. நிச்சயமாக இந்த 2 படங்களும் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படங்களி கதை 80 சதவீதம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அங்கங்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ஸ்கெட் வைத்திருகிறேன். இது த்ரில்லர் கதை. இதை எழுதும்போதே எனக்கு ஆர்வமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News