Connect with us

Cinemapettai

காணாமல் போன செல்வராகவன்.. அவரை மொத்தமாக சாய்த்த படம்

selvaraghavan-news

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காணாமல் போன செல்வராகவன்.. அவரை மொத்தமாக சாய்த்த படம்

செல்வராகவனின் காலம் மிகவும் குறுகிய காலம். சில வருடங்கள் சில படங்கள் மூலம் அவர் சம்பாதித்த பெயரை ஒரு சில படங்களில் மொத்தமாக இழந்து விட்டார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வந்த செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார் ஆனால் அதில் கூட ஒரு நல்ல பெயரை பெற்றார்.

இருந்தாலும் அதற்குப் பின் அவர் எடுத்த படங்களில் வந்த சோதனையில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. ஆர்யாவை வைத்து இரண்டாம் உலகம் என்ற ஒரு படத்தை எடுத்தார். அதோடு செல்வராகவனின் திரை உலக கனவு மறைந்தது. தன் கற்பனைக்கு ஏற்றார் போல் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் தேவையில்லாத செலவுகள் செய்வதின் மூலம் அவர்கள் ஏத்திக் கொண்ட பட்ஜெட் மற்றும் அந்த படத்தின் கதை திரைக்கதை என அனைத்தும் மொத்தமாக வீணாக போனது.

இரண்டாம் உலகம் படத்தைப் பார்த்த அனைவரும் ஒருவர் கூட முழுதாக படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். அனைவரும் பாதியிலேயே தூங்கி இருப்பார்கள். சிலர் படத்தின் இடைவெளியில் கிளம்பி இருப்பார்கள். தான் பண போட்டு எடுக்கும் சொந்த படமாக இருந்தாலும் சோதனை செய்து பார்க்கலாம். அடுத்தவர் வீட்டு பணத்தில் அவர் எப்படி சோதிக்கலாம்.

கமலஹாசனை போல அடுத்தவர் தயாரிப்பு என்றால் வித விதமான கற்பனைகள் மூலம் படத்தை எடுப்பார். செலவுகள் பண்ணுவார் ஏனென்றால் நஷ்டம் அவருக்கில்லை. செல்வராகவன் நினைத்திருந்தால் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, போன்ற நல்ல திரைக்கதையுடன் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்ல முடியும். ஆனால் அடுத்த கட்ட பெரிய இயக்குனர் என்ற போர்வைக்குள் போக ஆரம்பிக்க நினைத்ததால் வந்த வினை தான் அவருடைய திரை வாழ்க்கை.

அதன்பின் இரண்டாம் உலகம் படத்திற்கு பின் அவர் எடுத்த படங்கள் எதுவும் ஓடவில்லை இரண்டாம் உலகம் படுதோல்வி அதன்பின் சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி என ஒரு படம் எடுத்தார். இன்னும் எடுத்துக் கொண்டே இருக்கிறார். அதன்பின் எடுத்த என் ஜி கே படம் கூட வெளிவந்தது ஆனால் அது தோல்வி. இப்பொழுது நெஞ்சம் மறப்பதில்லை என எஸ் ஜே சூர்யாவை வைத்து ஒரு படம் எடுத்து வைத்துள்ளார். ஆனால் சுத்தமாக வியாபாரமே ஆகவில்லை.

ஒரு திறமையான இயக்குனர் என்றால் கதை திரைக்கதை மேல் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர பணத்தின் மேல் அல்ல. பெரிய பட்ஜெட் படத்தை நம்பி கதையில் திரைக்கதையில் கோட்டை விடுவது போன்ற தவறுகளை தான் பல இயக்குனர்கள் செய்து வந்தார்கள். அதே தவறை செல்வராகவன் அவர்களும் செய்து வந்துள்ளார்.

இப்பொழுது பட வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது உள்ள நிலையில் தனுஷ் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் தயாரிப்பாளர்களுக்கு செல்வராகவன் மேல் நம்பிக்கை இல்லை என்றே கூறுகின்றனர். இனிமேல் செல்வராகவன் அவருடைய கற்பனைக்கு படம் எடுக்க வேண்டுமானால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற இணையதளங்களில் படத்தை எடுத்து வெளியிடுவது நல்லது. எப்படியோ ஒரு நல்ல இயக்குனரை இழந்துவிட்டோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top