அந்த ரணம் இன்னும் ஆறல, இன்று வரை கண்ணீர் சிந்துகிறேன்.. மனம் வருந்தி பேசிய செல்வராகவன்

Selvaraaghavan: தமிழ் சினிமா எத்தனையோ இயக்குனர்களை கடந்து வந்திருக்கிறது. அதில் ஒரு சிலர் கொடுக்கும் தாக்கங்கள் தான் அழியாமல் இருக்கும். அதில் ஒருவர் தான் இயக்குனர் செல்வராகவன். உங்களுடைய எத்தனை படங்கள் தோல்வி அடைந்தாலும், நாங்கள் உங்களை கொண்டாடிக் கொண்டே தான் இருப்போம் என ரசிகர்கள் அவருடன் இருக்கிறார்கள்.

7g ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன் என அவருடைய படங்களில் லிஸ்ட் இன்று வரை இளைஞர்களின் பேவரைட் படங்களாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் செல்வராகவன் மனம் திறந்து நிறைய விஷயங்களை பகிர மாட்டார்.

ஆனால் காலம் கொடுத்த மாற்றம், இப்போது அவர் மனம் விட்டு நிறைய விஷயங்களை பேசுகிறார். அப்படி சமீபத்தில் செல்வராகவன் ஒரு பேட்டியில் தன்னுடைய பொக்கிஷ படமான ஆயிரத்தில் ஒருவன் பற்றி பேசியிருக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும் ரிலீசான நேரத்தில் அதை கொண்டாட மறந்தது நம்முடைய பெரிய குற்றம். இப்போ அந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசி, இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்.

மனம் வருந்தி பேசிய செல்வராகவன்

ஆனால் பொருளாதார ரீதியாக அந்த படத்திற்கு பெரிய சவுக்கடி கொடுத்தது நாம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சமீபத்திய பேட்டியில் செல்வராகவன் நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. அந்தப் படம் எனக்கு கொடுத்த ரணம் அதிகம்.

அந்த படத்தை நினைத்து இன்று வரை நான் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறேன். ஒரு வருட காலம் பெரிய போராட்டத்திற்கு நடுவே இந்த படம் ரிலீஸ் ஆனது. ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸ் ஆன பிறகு என்னை கருத்துக்களால் குத்தி கிழித்தவர்கள் அதிகம்.

என்னுடைய உழைப்பு என்பதை தாண்டி இந்த படத்திற்காக கஷ்டப்பட்டவர்கள் நிறைய பேர். அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு சமயத்தில் பாம்பு, விஷ பூச்சிகள் என நிறைய அவஸ்தை பட்டிருக்கிறோம்.

படத்தின் டெக்னிக்கல் காட்சிகளுக்காக இரவில் தூங்காமல் எல்லாம் வேலை பார்த்தோம். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த விஷயத்தை எனக்கு கொடுக்கவில்லை. தற்போது சோழர் ஆட்சி பற்றி படம் எடுப்பவர்கள் டைட்டில் கார்டில் எங்களை குறிப்பிடுங்கள்.

ஏனென்றால் நாங்கள் அந்த படம் எடுப்பதற்காக கடந்து போன பாதை ரொம்பவும் கடினமானது என பேசி இருக்கிறார்.

Next Story

- Advertisement -