Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றி பார்த்திபன் கேட்ட கேள்வி.. செல்வராகவன் சொன்ன நறுக் பதில்
என்னதான் செல்வராகவன் படம் வசூல் ரீதியாக தோல்வி பெறுகிறது என்று கூறினாலும் அவருடைய கற்பனை எல்லைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி நமது ராஜராஜ சோழனை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் தான் செல்வராகவன் எனும் கலைஞன்.
கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சரித்திர படமாக உருவாக இருந்த இந்த படத்தில் ராஜராஜ சோழன் என்ற மாமன்னரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அப்போது இருந்த ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டனர். தற்போதைய இளைஞர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். அந்த அளவு படத்தினுடைய புரிதல் மக்களிடையே உள்ளது.
இதனை ராஜராஜ சோழனாக நடித்த பார்த்திபன் சமீபத்தில் செல்வராகவனிடம், இதற்கு முன் இப்படி ஒரு எதிர்பார்ப்பு எந்த படத்திற்காக இருந்ததா என தனக்கு தெரியவில்லை என்றும், விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கு செல்வராகவனும், தனக்கு போன் பண்ணி இதனை தெரிவித்ததற்கு நன்றி எனவும், தயாரிப்பாளர் ரெடியாக இருந்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் எந்த வித தடங்கலும் இல்லை எனவும் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப எதிர்பார்ப்பு இருக்கும் போதே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து புத்திசாலித்தனமாக சம்பாதித்துக் கொள்வது நல்லது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இப்பொழுது ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரிலீஸ் செய்தாலும் நன்றாக கல்லா கட்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
