fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

செல்வராகவனை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள்.. ஆயிரத்தில் ஒருவன் 2 நிலைமை என்ன?

aayirathil-oruvan2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவனை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள்.. ஆயிரத்தில் ஒருவன் 2 நிலைமை என்ன?

NGK: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGK திரைப்படம் வெளிவர இருப்பதால் அனைத்துப் பிரஸ் மீட்டிலும் செல்வராகவன் கலந்துகொண்டு தன் கருத்துகளை கூறி வருகிறார். அவரிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது?

2010ஆம் வருடம் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் வசூல் ரீதியாக பெரிய அளவில் இல்லை என்றாலும் நல்ல பெயரை பெற்றது. இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற கோணத்தில் படத்தை முடித்திருப்பார்கள்.

ஆனால் அதன் பிறகு அவர் எடுத்த இரண்டாம் உலகம் படம் மிகப் பெரும் தோல்வியை சந்தித்தது. அதுவுமில்லாமல் அந்தப் படத்தை எடுக்கத் தெரியாத ஒரு நபர் எடுத்தார் என்பது போல் உள்ளது என்று பெரிய கருத்து நிலவியது. அதனால் தயாரிப்பாளர்கள் சற்று யோசித்தனர்.

தற்போது வெளிவரும் NGK திரைப்படம் நல்ல பெயரை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தால் மட்டுமே ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள். அப்படி இல்லை என்றால் அது கிடப்பில் போட வேண்டியதுதான்.

ஏனென்றால் அந்த படத்தின் பட்ஜெட் மிகப்பெரும் செலவாகும் அதை சரிகட்ட கண்டிப்பாக இது ஒரு ஹிட் படம் கொடுத்தாக வேண்டும். மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top