Tamil Cinema News | சினிமா செய்திகள்
செல்வராகவன் இயக்க ஆசைபடும் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்களையும் அந்த இயக்குனர்களையும் மறக்கவே முடியாது, ஏன் என்றால் அப்படி ஒரு ஹிட் கொடுத்திருப்பார்கள் அப்படி யாராலையும் மறக்க முடியாத இயக்குனர் என்றால் அது செல்வராகவன் தான்.
செல்வராகவன் தற்பொழுது சூர்யாவின் NGK படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு முடியும் நிலையில் வந்துவிட்டது இந்த நிலையில் செல்வராகவன் ஒரு ட்விட்டை போட்டு ரசிகர்களை குஷியாகியுள்ளார்.
செல்வராகவனின் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எப்பொழுது வேணும் என்றாலும் சுவாரசியமாக பார்க்கலாம், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி ரசிகர்கள் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் ஆனால் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் எடுக்கத்தான் ஆசைபடுகிராராம் இதோ அவரே அறிவித்த அறிவிப்பு.
அவர் கூறியதாவது வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் இவாறு கூறியுள்ளார்.
வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.
— selvaraghavan (@selvaraghavan) November 24, 2018
