பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு இத்தனை கோடி சம்பளமா? டைரக்சனை விட்ருங்க சார்!

விஜய்யின் மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

மேலும் கத்தி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யின் படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். அதனைத் தொடர்ந்து முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், மலையாள நடிகை அபர்ணா தாஸ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்களை விட அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் என்றால் அது இயக்குனர் செல்வராகவன் தான்.

ஜீனியஸ் இயக்குனர் என பெயர் வாங்கிய செல்வராகவன் கொஞ்ச நாட்களாகவே இயக்கத்திற்கு லீவு கொடுத்துவிட்டு நடிப்பில் களம் இறங்கிவிட்டார். அந்த வகையில் சாணிக் காகிதம் படத்தில் அல்மோஸ்ட் ஹீரோவாக நடித்து முடித்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படத்திலும் விஜய்க்கு வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் செல்வராகவன். செல்வராகவன் நடிப்பதே அதிர்ச்சி என்றால் அதைவிட பேரதிர்ச்சி அவரது சம்பளம் தான்.

பீஸ்ட் படத்தில் மட்டும் நடிப்பதற்காக செல்வராகவனுக்கு சுமார் 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இயக்குனராகவே அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார்கள், நடிகராக எப்படி என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி சுற்றி கேட்டுக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ படம் இயக்கினால் கொடுக்கும் சம்பளத்தை விட நடித்தால் அதிகமாக இருக்கிறது என செல்வராகவன் இனிமேல் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

selvaragavan-cinemapettai
selvaragavan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்