Connect with us
Cinemapettai

Cinemapettai

kokki-kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் செல்வராகவன் தனுஷ் கூட்டணி.. மிரட்டலான கேங்ஸ்டர் படத்தின் இரண்டாம் பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் என்ற கல்லை செதுக்கி சிற்பமாக தற்போது தமிழ் சினிமாவில் ஐம்பொன் சிலையாக உருவாக்கிய பெருமை இயக்குனர் செல்வராகவனை சேரும். தனுஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் என்றும் அவரது ரசிகர்களுக்கு பெரிதாக இருப்பது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள். வெற்றிமாறன் உடன் சேர்ந்து பல படங்கள் கொடுத்தாலும் செல்வராகவனுடன் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி இருக்கும். அந்தவகையில் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேங்க்ஸ்டர் திரைப்படம் புதுப்பேட்டை. தற்போது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதும் தயாராகி விட்டதாகவும் விரைவில் படத்தின் பணியை துவங்க இருப்பதாகவும் சமீபத்திய கல்லூரி விழா ஒன்றில் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட தனுஷ் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் அவர்களது அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களை செல்வராகவன் படத்திற்கு பெரிதும் எதிர் பார்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம், ஹிந்தி படம் என தொடர்ந்து வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top