Connect with us
Cinemapettai

Cinemapettai

australia-india

Sports | விளையாட்டு

ஆஸ்திரேலிய டி-20 தொடரிலும் இடம் பிடித்த தமிழக வீரர்.. சிட்னியை அலறவிட காத்திருக்கும் இந்தியா அணி!

ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தேர்வு குழு மற்றும் பிசிசிஐ அவரது திறமையை பார்த்து ஆஸ்திரேலியா செல்லும் சுற்றுப்பயணத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக முதலில் இடம் அளித்தனர்.

அதே நேரத்தில் டி20 அணியில் இடம்பெற்றிருந்த வருண் சக்கரத்திற்கு காயம் ஏற்படவே அந்த அதிர்ஷ்டத்தின் மூலம் தற்போது நடராஜன் டி20 அணியின் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியா சென்றடைந்த அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கும் 11 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

நடராஜனையும் சேர்த்து டி20 அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் நிச்சயம் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.

அவரைத் தவிர்த்து மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சைனி தீபக் சஹர் ஆகியோருடன் நடராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் நிச்சயம் இந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் ஆவது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியில் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஆதலால் ஒரு போட்டியிலாவது சோதனை அடிப்படையில் நடராஜன் நிச்சயம் விளையாடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top