Reviews | விமர்சனங்கள்
செய் படத்தின் திரைவிமர்சனம்.. நல்லதை துணிந்து செய்!
நகுல், தலைவாசல் விஜய்,பிரகாஷ்ராஜ் மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்து இன்று வெளியாகிய படம்தான் ‘செய்’. இப்படத்தின் தொடக்கத்தில் ஒரு மனநல காப்பகத்தில் தீ விபத்து ஏற்படுகிறது அதற்கு முக்கிய காரணம் தலைவர் பதவி வகிக்கும் ‘தலைவாசல் விஜய்’ தான் என்று எதிர்க்கட்சியினரும் பலரும் கூறியதால் அவர் பதவி விலகுகிறார். ஆனால் இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும்போது தலைவாசல் விஜய்யும் கொலை செய்யப்படுகிறார்.

sei
பொறுப்பே இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நடிகர் நகுல் சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை. அதற்கான முயற்சியில் இருக்கும்போது ஒரு கட்டத்தில் ஆஞ்சல் மீது காதல் ஏற்படுகிறது. இதுவே அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இப்படத்தில் முக்கிய மையக்கருவாக தலைவரான ‘தலைவாசல் விஜய்’ கொன்றவர் யார் என்று கண்டுபிடிக்கிறார் இதுதான் சுவாரஸ்யமாகவும்.
நகுல் அறிமுக சாங்கில் மிக அற்புதமாக ஆடியுள்ளார் மற்றும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, பின்பு வழக்கம்போல் கமர்சியலாக நடித்துள்ளார். அஞ்சலி ராவ் மற்றும் ஆஞ்சல் நடிகைகளும் அவரவர் கதாபாத்திரத்தில் கரெக்டாக நடித்துள்ளனர்.
கொஞ்சம் விறுவிறுப்பான நேரத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் போல் அமைந்துள்ளது. இன்னும் விறுவிறுப்பை அதிகரித்திருந்தால் படம் கண்டிப்பாக நல்ல கலெக்ஷன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மையக் கருத்தாக நீ செய்யும் காரியம் நல்லதாக இருந்தால் துணிந்து ‘செய்’ என்பது தான். எந்த அளவுக்கு மக்கள் மனதை கவர்ந்தது படம் எப்படி இருக்கும் என்பதை அடுத்த வாரம் கலெக்ஷனை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
Rating – 2.25/5
