நாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.!சேவாக் வைரல் டிவிட்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

நாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.!சேவாக் வைரல் டிவிட்.!

News | செய்திகள்

நாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.!சேவாக் வைரல் டிவிட்.!

கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். கோஹ்லி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

kohli

இதையடுத்து இவரது செஞ்சுரி குறித்து கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கோஹ்லி அடித்த செஞ்சுரியை பார்த்துவிட்டு சேவாக் வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நியூசிலாந்துக்கு இந்தியாவுக்கும் இடையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். கோஹ்லி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

cricket

கோஹ்லிக்கு இது சர்வதேச ஒருநாள் போட்டியில் 32 வது செஞ்சுரி ஆகும். மேலும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இது இவரது 6 வது ஒருநாள் போட்டியின் செஞ்சுரி ஆகும். மேலும் இதன்முலம் இவர் அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் டி வில்லியர்சின் சாதனையை முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் இவரது இந்த செஞ்சுரியை பார்த்து டிவிட்டரில் அனைவரும் ஆச்சர்யமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் வேகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ”விராட் கோஹ்லிதான் உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பிளேயர் என்று யாராவது கூறினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வேன். அவர்களிடம் சண்டை போட மாட்டேன்” என வித்தியாசமாக பாராட்டி இருக்கிறார்.

கோஹ்லியின் இந்த முரட்டுத்தனமான ஆட்டத்தை பார்த்துவிட்டு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “செஞ்சுரி மீது கோஹ்லிக்கு இருக்கும் பசியும், அவரது பார்மும் என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் சாம்பியன்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கோஹ்லி குறித்து க ருத்து தெரிவித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கோஹ்லி, டோணி இடையே இருக்கும் நட்பு குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது டிவிட்டில் “என்ன பிளேயர் அவர்..என்ன அருமையான பிளேயர் அவர். இன்னொரு 100 அடிச்சு இருக்கீங்க. எப்படி உங்களை பத்தி வார்த்தைகள்ல விவரிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

கோஹ்லி குறித்து அடிக்கடி கருத்து தெரிவிக்கும் சேவாக் இந்த முறையும் பேசி இருக்கிறார். அவர் ஹிந்தியில் கூறியிருப்பதாவது ” ப்ப்பா என்ன செஞ்சுரி, ஒருத்தரோட ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தா மட்டும் தான் இந்த மாதிரிலாம் விளையாட முடியும். கோஹ்லிக்கு ரத்தத்தோட ஹீமோகுளோபின் எல்லாத்துலயும் செஞ்சுரி வெறி இருக்கு” என்று ‘பாட்ஷாவின் போலீஸ்கார தம்பி ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top