Sports | விளையாட்டு
எங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்
இந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றத்திற்கு பின்னர் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். பல முன்னால் கிரிக்கெட் வீரர்களும் தன்னால் முடிந்தளவு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதான் சரியான நேரம் என்று தங்களது ஆதங்கத்தையும் சேர்த்து இப்பொழுது வெளிப்படுத்துகின்றனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் சேவாக் அளித்த பேட்டியில் “முன்பெல்லாம் அணி வீரர்களிடம் கேட்டுவிட்டு தான் அவர்களை நீக்குவார்கள் ஆனால் நாங்கள் விளையாடும் சமயம் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்களை புறக்கணித்தார்கள். பின்பு தூக்கிவிட்டார்கள்.
2007 க்கு பின்னர் இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை, ஆனால் இப்பொழுது மட்டும் மூத்த வீரர்களை அணையில் இருந்து நீக்குவதற்கு யோசிக்கிறார்கள். நமது அணி ஒரு சில வெற்றி பெற வேண்டும் என்றால், சில நடவடிக்கைகளில் துணிந்து எடுக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை, நாங்கள் பொருத்து கொண்டோம் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் சச்சின், கங்குலி, சேவாக், டிராவிட் போன்ற முன்னணி வீரர்கள் வாய்ப்பை பறித்ததும் தோனிதான் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அவர்களின் வாய்ப்பை பறித்துத்தான் தோனி டீம் உள்ளே இறங்கியது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
