Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது விஜய் சேதுபதியின் சீதக்காதி பட செகண்ட் லுக் போஸ்டர்.
Published on
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன்.மறுபடியும் இந்த கூட்டணி விஜய் சேதுபதியின் 25 வது படத்தில் இணைந்துள்ளது.

Vijay Sethupathi
ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் கிட்டத்தட்ட 80 வயது முதியவர் தோற்றத்தில் உள்ள முதல் லுக் போஸ்டர் வெளியானது.
பேஷன் ஸ்டூடியோ என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கின்றனர். பார்வதி நாயர், காயத்ரி, ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை.
சமீபத்தில் வெளியான “அய்யா” பாடல் ஹிட் ஆனது. இந்நிலையில் நேற்று இரண்டாவது போஸ்டரை ட்விட்டரில் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
